சேலம்: சேலத்தில் புதன்கிழமை ஆட்சியர் சி.அ. ராமன் வெளியிட்ட பட்டியலில் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 30 லட்சத்து 4 ஆயிரத்து 140 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக நான்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டத்திலுள்ள 11 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் புதன்கிழமை வெளியிட்டார்.
சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 14 லட்சத்து 95 ஆயிரத்து 165 ஆண் வாக்காளர்கள் ; 15 லட்சத்து 8 ஆயிரத்து 771 பெண் வாக்காளர்கள், இதர பிரிவைச் சேர்ந்த 204 வாக்காளர்கள் என மொத்தம் 30 லட்சத்து 4 ஆயிரத்து 140 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 46 ஆயிரத்து 391 பேர் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புனித வெள்ளி - தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

அபுதாபியில் ஈரான் மீண்டும் தாக்குதல்: ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியா்கள் காயம்

தமிழகத்தில் ஏப். 9 வரை மழைக்கு வாய்ப்பு

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக முடித்துள்ளது! காட்பாடி அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


