ஜன.22-இல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்கிறேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரும் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவிருக்கிறார்.


சென்னை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரும் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவிருக்கிறார்.
ஒரு மருத்துவராக நாளை மறுநாள் நான் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவிருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், ஜனவரி 22-ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னைக்கு அனுப்பப்பட்டிருக்கும் இரண்டாவது கட்ட கரோனா தடுப்பூசி கோவிஷீல்டு மருந்துகளை (5,08,500 டோஸ்) அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார்.
மாநில மருந்துகள் பாதுகாப்புக் கிடங்கில் இந்த மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 25,008 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முதல் கட்டமாக சுமார் 5 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள் வரப்பெற்ற நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக0 மேலும் 5 லட்சம் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...