சென்னை: 'வேளச்சேரியா? வெள்ளச்சேரியா?' எனும் வினாவோடு கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று காலை வேளச்சேரி காந்தி சாலையில் நடைபெற்றது.
இது குறித்து திமுக வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள வேளச்சேரி ஏரியை சூழ்ந்துள்ள கழிவுகளை அகற்றி, இந்த ஏரியையும் சேத்துப்பட்டு ஏரியையும் அழகுபடுத்தி, படகு போக்குவரத்துடன் கூடிய சுற்றுலாத்தலமாக மாற்றும் பணிகள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. சேத்துப்பட்டு ஏரி மட்டுமே பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில், வேளச்சேரி ஏரிக்கு வரும் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு புதிய பாதைகள் அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு கடந்த பத்தாண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் எந்த பணியும் நடைபெறாமல் உள்ளது.
2018ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த ஏரியை சீரமைக்க 25 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தார். இரண்டு ஆண்டுகள் கழிந்தும் ஏரியை சீரமைக்கும் பணிகள் துவங்கப்படவில்லை. அதேபோல் திமுக ஆட்சியில் வீராங்கல் ஓடை சீரமைக்கும் பணிகள் இருபது சதவீதம் நிறைவுற்றது. நூறு கோடிக்கும் மேலான வீராங்கல் ஓடையை ஆழப்படுத்தி, இருபுறமும் கான்கிரீட் தடுப்புகள் கட்டும் திட்டம் கடந்த பத்தாண்டுகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த பருவ மழைகாலத்தில் வேளச்சேரி மிகப்பெரிய வெள்ள பாதிப்புக்குள்ளானது. வாரக்கணக்கில் மழைநீர் தேங்கி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, இதை கவனிக்காத அதிமுக அரசை கண்டித்துதான் இந்த கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் வாகை சந்திரசேகர், எஸ்.அரவிந்த்ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் க.தனசேகரன், மு.மகேஷ்குமார், மாநில அணிகளின் நிர்வாகிகள் பாலவாக்கம் க.சோமு, வேளச்சேரி பி.மணிமாறன், கவிஞர் காசிமுத்துமாணிக்கம், சி.பிரதீப், பகுதி கழக செயலாளர் துரை.கபிலன், சு.சேகர், எஸ்.வி.ரவிச்சந்திரன், வி.இ.மதியழகன், இரா.துரைராஜ், கே.கண்ணன், மு.ராசா, நொளம்பூர் வே.ராஜன், காரப்பாக்கம் கணபதி, இளைஞர் அணி நிர்வாகிகள் வே.ஆனந்தம், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா உள்ளிட்டோருடன் பொதுமக்களும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தம் எதிர்ப்பை பதிவு செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டாடா பஞ்ச் இவி பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம்!

ஆப்கனுடன் போர்ப் பதற்றம்! 6 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷியா செல்கிறார் பாக். பிரதமர்!

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர்நிறுத்தத்துக்கு சீனா அழைப்பு!

மகளிர் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வீடியோக்கள்

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | March 1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
தினமணி வீடியோ செய்தி...

