புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் உணவகத்தில் சுமார் ரூ.17 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன சமையலறையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
கரோனா காலத்தில் சிறப்பாக பணி செய்து வரும், சென்னை பெருநகர காவல் துறையினரின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் செயல்படுத்தி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள உணவகத்தை சில மாதங்களுக்கு முன் பார்வையிட்டு, உணவு தயாரிக்கும் உபகரணங்கள் சுகாதாரமாக அமைக்க ஏற்பாடு செய்வதற்காக காவலர்களிடம், காவல் ஆணையாளர் கலந்து ஆலோசித்த போது, காவலர்கள் நவீன சமையலறையை அமைக்க வேண்டுகோள் விடுத்தனர். காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுத்து ரூ.17,32,296/- செலவில் புதிதாக நவீன சமையலறை அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியினை சென்னை பெருநகர தலைமையிட கூடுதல் ஆணையாளர் அமல்ராஜ் நேரடி கண்காணிப்பில், இணை ஆணையாளர் தலைமையிடம், மற்றும் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் இன்று (22.1.2021) காலை புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன சமையலறையை காவலர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் காவல் ஆணையாளர் அவர்கள் ஆயுதப்படை ஆண் மற்றும் பெண் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழகத்தில் சேரும் முதல் பெண் ஓட்டுநா் ரம்யா

புதுகையில் வருவாய்த் துறையினா் மறியல்: 540 போ் கைது

பெரம்பலூரில் விலங்குகளுக்கான கருத்தடை மையம் திறப்பு

காவல்துறை சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

