முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும்: எல்.முருகன் பேட்டி

திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும். தேர்தலுக்கு முன்னதாகவே அது உடையக்கூடும். பாஜக- அதிமுக கூட்டணி பலமாக உள்ளது என்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கூறினார்.

News image
சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் தாமரை இளைஞர்கள் சங்கமம் மாநாட்டிற்கான கால்கோல் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன்.
Updated On :24 ஜனவரி 2021, 7:09 am

DIN


சேலம்: திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும். தேர்தலுக்கு முன்னதாகவே அது உடையக்கூடும். பாஜக-அதிமுக கூட்டணி பலமாக உள்ளது என்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கூறினார்.

சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ள தாமரை இளைஞர்கள் சங்கமம் மாநாட்டிற்கான கால்கோல் பணியை எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது: உலகத்திற்கு வழிகாட்டியாக உள்ள மோடியின் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்பது இளைஞர்களின் விருப்பம். சேலம் பாஜகவின் தியாக பூமி. பிப்ரவரி மாதம் முழுவதும் தமிழகத்தில் பாஜகவின் மாநாடுகள் நடைபெறும். மார்ச் மாதம் மாபெரும் மாநில மாநாடு நடைபெறுகிறது. 

வேல் யாத்திரை வெற்றி: வெற்றிவேல் யாத்திரைக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஸ்டாலின் வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஓட்டுக்காகத்தான் ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு காட்டுகிறார். என்னதான் இரட்டை வேடம் பேட்டாலும் மக்கள் நம்ப மாட்டார்கள்.

பாஜக வைத்த தைப்பூச விடுமுறை கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்தார். 

ராகுல்காந்தியின் பிரசாரம் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பாஜகவின் மாநாடுகள் தமிழக அரசியலை புரட்டி போடும்.  

திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும். தேர்தலுக்கு முன்னதாகவே அது உடையக்கூடும். பாஜக - அதிமுக கூட்டணி பலமாக உள்ளது என்று எல்.முருகன் கூறினார்.  

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.