கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுக துரிதப்படுத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக துரிதப்படுத்த வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.


சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக துரிதப்படுத்த வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தருமபுரியில் தேமுதிக கட்சி அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியது:
தேமுதிக பொருத்தவரை வருகிற சட்டப் பேரவைத் தேர்தலுக்குத் தயாராக உள்ளது. சசிகலா பூரண நலம் பெற வேண்டும். தொடர்ந்து அவர் அரசியலில் ஈடுபட வேண்டும். ஒரு பெண்மணியாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு. சசிகலா வருகையால் அதிமுகவில் பாதிப்பு ஏற்படுமா என்பது அவர்களின் உள்கட்சி விவகாரம். அதில் தேமுதிக கருத்துச் சொல்ல இயலாது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேர்தலுக்குப் பிறகு அவருக்கு மக்களின் ஆதரவு எப்படி உள்ளது என்பது தெரியவரும்.
சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக, காலதாமதப்படுத்தாமல் கூட்டணி குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களிடமிருந்து பெற்ற மனுக்களுக்கு 100 நாள்களில் தீர்வு காணப்படும் என்கிறார். ஆனால் தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செய்தபோது திமுகவினர் என்ன செய்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். யார் வேண்டுமானாலும் வாக்குறுதி அளிக்கலாம். அதனை நிறைவேற்றுவது யார் என்பதுதான் முக்கியம்.
அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே தேமுதிக 41 தொகுதிகளைப் பெற்று போட்டியிட்டுள்ளது. அதேபோல் இம்முறையும் தொகுதிகளை எதிர்பார்க்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...