எடப்பாடி பழனிசாமியை முதல்வராக மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் இன்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
'சசிகலா குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எனது கருத்து. ஒரு பெண்ணாக அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக மக்களால் தேர்தெடுக்கப்படவில்லை. அவர் அதிமுகவினரால் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டார்' என்று கூறினார்.
மேலும், '100 நாள்களில் மக்களின் பிரச்னை தீரும் என்று கூறும் ஸ்டாலின், அவரது கட்சி ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்? எனவே, வாக்குறுதி யார் வேண்டுமானாலும் அளிக்கலாம், அதை நிறைவேற்றுவது முக்கியம்' என்று தெரிவித்தார்.
கமல் ஹாசனுக்கு மக்கள் செல்வாக்கு எவ்வளவு உள்ளது என்பது இந்தத் தேர்தலில் தெரிய வரும் என்று கூறிய அவர், அதிமுக கூட்டணியில் எற்கெனவே கொடுக்கப்பட்ட 41 தொகுதிகளை இந்தத் தேர்தலிலும் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.
2021 தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணியில் இருக்கும் தேமுதிக தரப்பில் பிரேமலதா இவ்வாறு கூறியுள்ளது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை ரயில்வே கோட்டத்தில் 11 புதிய நடைமேம்பாலங்கள்

‘விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்’ - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பேரூா் பட்டீசுவரா் கோயில் நகை மோசடி: எழுத்தருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


