தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பாஜகவில் இணைந்தார் காங். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

News image
பாஜகவில் இணைந்தார் காங். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்
Updated On :28 ஜனவரி 2021, 12:52 pm

DIN

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

தில்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் இருவரும் பாஜகவில் இணைந்தனர்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி குழப்பம் நீடித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் ஆகியோர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர்.

இருவரும் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரஸ் கட்சியும் அவர்களை ராஜிநாமா செய்வதாக அறிவித்தது.

இருவரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் சிவகொழுந்துவைச் சந்தித்து அளித்தனர். அவர்களின் ராஜிநாமா கடிதத்தை சட்டப் பேரவைத் தலைவரும் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் ஆகியோர் தில்லியில் இன்று பாஜகவில் இணைந்தனர். 

இன்று (ஜன.28) காலை தில்லிக்கு புறப்பட்ட அவர்கள் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.