தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜவுளித் துறையை மத்திய அரசு மீட்டெடுக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

ஜவுளித் துறையை மத்திய அரசு மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

News image

மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Updated On :29 ஜனவரி 2021, 10:24 am

DIN

ஜவுளித் துறையை மத்திய அரசு மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் கரோனா காலத்தில் மூடப்பட்ட பஞ்சாலைகளைத் தேசிய பஞ்சாலைக் கழகம் திறக்க மறுத்து வருவதால், அவை அனைத்தும் நிரந்தரமாக மூடப்படும் என்கிற அச்சம் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை ஆகிய நகரங்களில் சிறு, நடுத்தர பஞ்சாலைகள் மிகப்பெரிய அளவில் பங்காற்றி வருகின்றன. பருத்தி நூல்
ஏற்றுமதி 39 சதவிகிதம் சரிந்திருக்கிறது. இதனால் ஜவுளி தொழில் கடுமையான பொருளாதார முடக்கத்திற்கு ஆளாகியிருக்கிறது.

எனவே, பிரதமர் மோடி அவர்கள் திருக்குறளையோ, பாரதியார் கவிதைகளையோ மேற்கோள் காட்டி பேசுவதால் தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள்
தீர்ந்துவிடப் போவதில்லை. தமிழர்கள் மீது உண்மையிலேயே அவருக்கு அக்கறை இருக்குமேயானால், அழிவின் விளிம்பில் இருக்கிற ஜவுளித் துறையைக் காப்பாற்றி, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்துப் பாதுகாக்க வேண்டுமெனப் பிரதமர் மோடியைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.