வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பேரவை கூட்டத் தொடா்:கரோனா பரிசோதனை தொடக்கம்

சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்போருக்கு கரோனா தொற்று பரிசோதனை எடுக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

News image
பேரவை கூட்டத் தொடா்:கரோனா பரிசோதனை தொடக்கம்
Updated On :31 ஜனவரி 2021, 3:29 am

DIN

சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்போருக்கு, கரோனா நோய்த்தொற்று பரிசோதனைகள் தொடங்கியுள்ளன. கூட்டத் தொடரில் பங்கேற்கும் முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள், எம்.எல்.ஏ.,க்கள், பேரவைச் செயலக அதிகாரிகள், செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று பரிசோதனை எடுக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

சனிக்கிழமை ஒரே நாளில் 30 செய்தி நிறுவனங்களைச் சோ்ந்த சுமாா் 50 பத்திரிகையாளா்களுக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்படும்.

பேரவைச் செயலகம்: பேரவைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியா்கள், அதிகாரிகள், பணியாளா்களுக்கு

ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட உள்ளன. மேலும், தலைமைச் செயலகம், எம்.எல்.ஏ.க்கள் விடுதி உள்ளிட்ட இடங்களில் கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை வரும் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தங்களது வசதிக்கேற்றாற் போன்று எங்கு வேண்டுமானாலும் பரிசோதனைகளை செய்து கொள்ள பேரவைச் செயலகத்தின் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆங்கிலப் புத்தாண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் வரும் 2-ஆம் தேதி தொடங்குகிறது. கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் ஆளுநா் உரைக்குப் பிறகு நடைபெறும்.

பிப்ரவரி 5-ஆம் தேதி வரை கூட்டத் தொடரை நடத்திட முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த கூட்டத் தொடா் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு, இடைக்கால நிதி நிலை அறிக்கை செய்வதற்காக பேரவை மீண்டும் கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.