அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கடவுள் நம்பிக்கை கூடாது என்று சொல்லவில்லை: ஸ்டாலின்

கடவுள் நம்பிக்கை கூடாது என்று சொல்லவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :17 பிப்ரவரி 2021, 5:34 pm

DIN

கடவுள் நம்பிக்கை கூடாது என்று சொல்லவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் நசரேத்பேட்டையில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், கரூர் மாவட்டத்தில், மினி க்ளினிக் ஒன்று கட்டி இருக்கிறார்கள். நேற்று அதனை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அவ்வாறு திறந்து வைக்கும்போதே அந்த பில்டிங் இடிந்து விழுகிறது.

இதேபோல ஒரு வாரத்திற்கு முன்பு, விழுப்புரத்தில் ஒரு அணை திறந்த ஒரு மாதத்திற்குள் இடிந்து விழுகிறது. பொன்முடி அதற்கு போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது சில அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து விட்டார்கள். அதாவது இரயில் இன்ஜினை திருடியவர்களை விட்டு விட்டு, இரயில் இன்ஜினில் கரி எடுத்தவனை பிடித்தது போல நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு கோவிலை திறந்து வைத்துப் பேசிய பழனிசாமி, திருத்தணியில் நான் வேல் வைத்திருந்ததை விமர்சித்துள்ளார். வேல் எனக்கு பரிசளிக்கப்பட்டது. மாவட்டக் கழகச் செயலாளர், பொதுமக்கள், கோயில் பூசாரிகள் எனக்கு வழங்கினார்கள். அதை நான் வைத்திருந்தேன். கடவுள் நம்பிக்கை கூடாது என்று நாம் சொல்கிறோமா? “கோயில்கள் கூடாது என்பதல்ல; கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விட கூடாது என்பதற்காக” என்று பராசக்தி திரைப்படத்தில் தலைவர் கலைஞர் எடுத்துக் கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.