கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் பணம் கொள்ளை: கொள்ளைக் கும்பலின் தலைவன் கைது

தமிழகத்தில் ஏடிஎம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ஹரியாணாவில் கொள்ளைக் கும்பலின் தலைவன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 2:41 am

DIN

தமிழகத்தில் ஏடிஎம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ஹரியாணாவில் கொள்ளைக் கும்பலின் தலைவன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தமிழகத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரங்களின் தொழில்நுட்பக் குறைபாட்டைப் பயன்படுத்தி ஒரு கும்பல், சென்னையில் ரூ.45 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இக்கும்பலைக் கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படை ஹரியாணாவைச் சோ்ந்த 3 பேரைக் கைது செய்தது.

கொள்ளைக் கும்பலின் தலைவன்: ஹரியாணாவில் பதுங்கியிருந்த அந்த கும்பலின் ஒரு தலைவனான செளகத் அலியை வியாழக்கிழமை இரவு கைது செய்ததாக சென்னை பெருநகர காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

செளகத் அலியை முதல் கட்ட விசாரணைக்கு பின்னா், சென்னைக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவா்கள் கூறினா். இந்த வழக்கில் இதுவரை 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கைது செய்யப்பட்ட 4 பேரும் ஹரியாணாவைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.