கிருஷ்ணகிரி அருகே பணம் இரட்டிப்பு மோசடி கும்பல் கைது
கோவையைச் சேர்ந்த பி. சந்திரகுமார் (38) என்பவரிடம் ரூ. 80 லட்சம் மோசடி செய்த கும்பகோணத்தை சேர்ந்த பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை மகாராஜ கடை போலீசார் கைது செய்தனர்.


கிருஷ்ணகிரி: கோவையைச் சேர்ந்த பி. சந்திரகுமார் (38) என்பவரிடம் ரூ. 80 லட்சம் மோசடி செய்த கும்பகோணத்தை சேர்ந்த பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை மகாராஜ கடை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், சித்தா புதூர், சரோஜினி மூன்றாவது வீதியைச் சேர்ந்தவர் ஆர்.சந்திரகுமார். கும்பகோணம், நவாப் தெருவைச்சேர்ந்தவர் நாசர்(38). இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்த நிலையில், நாசர், சந்திரகுமாரை சந்தித்து 500 ரூபாய் தாளாக கொடுத்தால், அதற்கு ஈடாக இருமடங்கு தொகை நூறு நூறு ரூபாயாக தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய சந்திரகுமார், நாசரிடம் ரூ.80 லட்சத்தை கிருஷ்ணகிரியை அடுத்த குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி செல்லும் பிரிவு சாலை அருகே கொடுத்துள்ளார். சந்திரகுமாரிடம் பணத்தை பெற்றுக்கொண்ட நாசர், பின்னர் தலைமறைவானார்.
இதுகுறித்து சந்திரகுமார் அளித்த புகாரின் பேரில் மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்தனர். விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த ராஜேஷ் (26) கும்பகோணத்தை சேர்ந்த மோகன்ராஜ் (27) ஜெயக்குமார் (26) முத்துக்குமார் என்ற ராஜேஷ் (32) காமராஜ் என்ற நரி (25) நாசர் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கும்பல் கிருஷ்ணகிரி அருகே கடந்த 2016 ஆம் ஆண்டு இதுபோன்ற மோசடி சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...