தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

திமுகவில் இணைந்தார் மநீம மகேந்திரன்!

மக்கள் நீதி  மய்யம் கட்சியிலிருந்து விலகிய மகேந்திரன் உள்பட 78 நிர்வாகிகள் திமுகவில் வியாழக்கிழமை இணைந்தனர்.

News image
திமுகவில் இணைந்தார் மநீம மகேந்திரன்(படம்: டிவிட்டர்)
Updated On :8 ஜூலை 2021, 1:03 pm

DIN

மக்கள் நீதி  மய்யம் கட்சியிலிருந்து விலகிய மகேந்திரன் உள்பட 78 நிர்வாகிகள் திமுகவில் வியாழக்கிழமை இணைந்தனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய மகேந்திரன், பத்மபிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்துள்ளனர்.

மேலும், திமுகவில் இணையவுள்ள 11,000 பேரின் பெயர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளார்.

இந்த நிகழ்வில், அமைச்சர் துரைமுருகன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி  மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 

நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் கோவை பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் அதிகளவிலான வாக்குகளை பெற முக்கிய காரணமாக உள்ளவர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.