மேற்கு மண்டலத்தில் பலம் சேர்க்கும் திமுக: இன்று இணைகிறார் மகேந்திரன்
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய மகேந்திரன் உள்பட 78 பேர் இன்று திமுகவில் இணைகிறார்கள்.


மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய மகேந்திரன் உள்பட 78 பேர் இன்று திமுகவில் இணைகிறார்கள்.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
தேர்தலுக்குப் பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன், தேர்தல் தோல்விக்கு கமல்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் மகேந்திரன் உள்பட 78 பேர் திமுகவில் இணையவுள்ளனர்.
மேலும், நிகழ்வின் போது திமுகவில் இணையவுள்ள 11,000 பேரின் பெயர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கவுள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் கோவை பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் அதிகளவிலான வாக்குகளை பெற முக்கிய காரணமாக உள்ளவர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...