/

உசிலம்பட்டியில் பெட்ரோல், டீசல், கேஸ் உயர்வைக் கண்டித்து கையெழுத்து இயக்கம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காங்கிரஸ் கட்சியின் சார்பாக கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:35 am

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காங்கிரஸ் கட்சியின் சார்பாக கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

உசிலம்பட்டியில் கேஸ், பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்து மதுரை -தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெட்ரோல், டீசல் விலையை திரும்பப்பெற வேண்டும் எனவும் மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் மற்றும் வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

Story image

காங்கிரஸ் கட்சி சார்பாக உசிலம்பட்டி நகரத் தலைவர் காந்தி சரவணன், தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் மகேந்திரன், மாவட்டப் பொருளாளர் தீபா பாண்டி, முன்னிலையில் மாநில செயலாளர் எஸ்.ஓ.ஆர்.இளங்கோவன், துவக்கி வைத்தார்.

இதில் முன்னாள் மாவட்டச் செயலாளர் விஜயகாந்தை, முருகேசன், அரசப்பன், ஜெய்கணேஷ், கணபதி, தினகரன், தமிழன், மற்றும் மகளிர் அணி என காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உசிலம்பட்டி தெற்கு வட்டார காங்கிரஸ் சார்பாக வட்டார தலைவர் வேஸ்டன் முருகன் தலைமையில் மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், வட்டார செயலாளர் தவமணி, முத்துப்பாண்டி, முன்னிலையில் மாநில காங்கிரஸ் செயலாளர் எஸ்.ஓ.ஆர் இளங்கோவன் துவக்கி வைத்தார். 

இதில், மாவட்ட பொறியாளர் அணி தலைவர்  பிரவினா,  மகளிர் அணி தலைவி முத்து மணி.  மகளிர் அணி சார்பாக பேச்சியம்மாள் சீதா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.