தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது

மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது

Updated On :9 ஜூலை 2021, 5:45 am


சென்னை: மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடலில் 11ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. 

தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர பகுதிகளுக்கு அருகே வங்கக் கடலில் உருவாகவிருக்கும் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் வரும் வாரத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கலயநல்லூரில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.