தமிழகத்தில் புதிதாக 2,913 பேருக்கு கரோனா
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைவாக 2,913 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைவாக 2,913 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,913 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,16,011 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 3,321 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 24,49,873 பேர் குணமடைந்துள்ளனர்.
49 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 33,371 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 32,767 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக கோவையில் 338 பேரும், ஈரோட்டில் 215 பேரும், சேலத்தில் 180 பேரும், சென்னை மற்றும் தஞ்சாவூரில் தலா 174 பேரும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...