சென்னையில் 21 கிலோமீட்டர் தூரம் மாரத்தான் போட்டியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பதக்கம் வென்றார்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பல ஆண்டுகளாகவே உடற்பயிற்சிகளில் தனி கவனம் செலுத்துவதுடன் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் அமைச்சரான பின்பு இன்று முதல்முறையாக மாரத்தான் போட்டியில் பங்கேற்று இலக்கை நிறைவு செய்தார்.
லண்டன் மெய்நிகர் மாரத்தான் போட்டியில் சென்னை கிண்டி லேபர் காலனியில் தொடங்கி மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை 21 கிமீ தூரத்தை 2 மணி நேரம் 8 நிமிடங்களில் நிறைவு செய்து பதக்கத்தை வென்றார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கரோனா பேரிடர் காலத்தில் நம்மை நாமே தற்காத்துக்கொள்வதற்கு உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு ஏதுவாக 'ஓடலாம்; நோயின்றி வாழலாம்' என்ற நோக்கத்தை உணர்த்தும் வகையில் இந்த போட்டியில் கலந்துகொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனாவால் ஒன்றரை ஆண்டுகளாக மாரத்தான் போட்டி நடைபெறவில்லை. இளைஞர்களிடம் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இன்று நடைபெற்ற போட்டி என்றார்.
பின்னர் ஜிகா வைரஸ் குறித்துப் பதிலளித்த அவர், டெங்குவின் தொடர்ச்சி தான் ஜிகா வைரஸ் என்று கூறுகிறார்கள். ஜிகா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரப் பணியாளர்களுக்கு, தேவையில்லாமல் நிற்கும் நீரை வெளியேற்ற அறிவுறுத்தப்படும். புகைமருந்து, கொசுமருந்து, டிரோன்களின் மூலம் மருந்து தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விருச்சிக ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

மழையால் பாதித்த நெற்பயிருக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்

அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

வலங்கைமான் புறவழிச்சாலை பணி தொடக்கம்
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

