திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

தமிழக அரசின் 'சி.பா. ஆதித்தனார் விருது'க்கு விண்ணப்பிக்கலாம்

நாளிதழ், வார இதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் 'சி.பா. ஆதித்தனார் விருது'க்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:37 am

DIN

நாளிதழ், வார இதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் 'சி.பா. ஆதித்தனார் விருது'க்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: 

தமிழ் மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் போற்றியும், பிறமொழிக் கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பட்டும் வரும் நாளிதழ், வார இதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓர் இதழைத் தெரிவுசெய்து  “தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார்” அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இவ்விருது ஒவ்வொன்றிற்கும் விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், கேடயமும், பாராட்டிதழும் வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறும்.

2021ஆம் ஆண்டிற்கு இவ்விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம், விண்ணப்பத்திற்கான வரையறைகள் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பிப்பவர்கள் நாளிதழ், வார இதழ், திங்களிதழ், தொடங்கிய ஆண்டு, ஆற்றிய பணிகள், செய்த சாதனைகள், தற்போது ஆற்றிவரும் பணிகள், ஏற்கெனவே பெற்ற பாராட்டு விவரங்கள் ஆகியவற்றைத் தொகுத்து முழு விவரங்களுடன் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 30.07.2021 ஆம் நாளுக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். 

முகவரி        

தமிழ்வளர்ச்சிஇயக்குநர்,
தமிழ்வளர்ச்சிஇயக்ககம்,
தமிழ்வளர்ச்சிவளாகம், முதல்தளம்,
தமிழ்ச்சாலை, எழும்பூர்,
சென்னை-  600 008.
தொ.பே.எண்.044 28190412, 04428190413
மின்னஞ்சல்முகவரி: tamilvalarchithurai@gmail.com
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.