கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் சைக்கிள் பேரணி

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை சைக்கிள் பேரணி நடைபெற்றது.

News image
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் சைக்கிள் பேரணி
Updated On :28 ஜனவரி 2024, 3:37 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தமிழகத்தில்  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணி ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி ராமகிருஷ்ணாபுரம் வழியாக வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து,தொடர்ந்து பெரிய மாரியம்மன் கோவில், தேரடிபேருந்து நிறுத்தம் வழியாக மேலரத வீதியாக அங்கிருந்த  முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி நாயுடு ஆகியோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு சைக்கிள் பேரணியை நிறைவு செய்துள்ளனர்.

இந்தப் பேரணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் நகர தலைவர் பட்ஷிராஜா வி.சி.வன்னியராஜ், தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரங்கசாமி, மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்.சக்திமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலிடப் பார்வையாளர் எஸ்.வி. முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதில் மாவட்ட செயலாளர் முருகேசன், தெற்கு வட்டார தலைவர் பூமிநாதன், மம்சாபுரம் பேரூராட்சி தலைவர் சூரியநராயணன், மற்றும் நகர வட்டார பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.