/

இன்றைய தங்கம் விலை நிலவரம்: ஒரு கிராம் ரூ.4521

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.36,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.14 உயர்ந்து ரூ.4521க்கு விற்பனையாகிறது.

News image
இன்றைய தங்கம் விலை நிலவரம்: ஒரு கிராம் ரூ.4521
Updated On :28 ஜனவரி 2024, 3:37 am

DIN


 
சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.36,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.14 உயர்ந்து ரூ.4521க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை படிப்படியாக உயா்ந்து, கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. 

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.36,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14 உயர்ந்து, ரூ.4,521 ஆக உள்ளது. வெள்ளி கிராமுக்கு 60 பைசா உயர்ந்து, ரூ.74.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.74,400 ஆகவும் உள்ளது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,521
1 சவரன் தங்கம்...............................36,168
1 கிராம் வெள்ளி.............................74.40
1 கிலோ வெள்ளி.............................74,400.


திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,507
1 சவரன் தங்கம்...............................36,056
1 கிராம் வெள்ளி.............................73.80
1 கிலோ வெள்ளி.............................73,800
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.