பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

புதுச்சேரியில் 21 குழந்தைகளுக்கு கரோனா: ஆய்வறிக்கை தர வலியுறுத்தல்

புதுச்சேரியில் 21 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதியானது தொடர்பாக ஆய்வறிக்கை தர வலியுறுத்தப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :15 ஜூலை 2021, 3:15 pm

DIN

புதுச்சேரியில் 21 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதியானது தொடர்பாக ஆய்வறிக்கை தர வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் இன்று வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 81 பேருக்கும், காரைக்காலில் 14 பேருக்கும், ஏனாமில் 1 பேருக்கும், மாஹேவில் 7 பேருக்கும் என மொத்தம் 103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,19,405-ஆக அதிகரித்தது.  இதனிடையில், புதுச்சேரியில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். 
இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,773-ஆக உயா்ந்தது. இதனிடையே, 122 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,16,325-ஆக அதிகரித்தது.  மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 257 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 1,050 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 1,307 போ் சிகிச்சையில் உள்ளனா் என சுகாதாரத் துறை தெரிவித்தது. 
இதனிடையே புதுச்சேரியில் தளர்வுளுடன் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் 21 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதியானது தொடர்பாக ஆய்வறிக்கை தர வலியுறுத்தப்பட்டுள்ளது. கரோனா மேலாண்மை சீராய்வு கூட்டத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். 
மேலும் 21 குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். கரோனா 2-வது அலையைத் தொடா்ந்து, 3-வது அலை பாதிப்பு வரும் என வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். 3-ஆவது அலையின்போது குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவாா்கள் எனக் கூறப்படுகிறது. கரோனா 3-ஆவது அலையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் தனிப் பிரிவுகள் தொடங்க வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.