மேக்கேதாட்டுவில் கர்நாடகம் புதிய அணை கட்ட முயற்சிப்பது, தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதாகும்: வைகோ
மேக்கேதாட்டுவில் கர்நாடகம் புதிய அணை கட்ட முயற்சிப்பது, தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதாகும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.


மேக்கேதாட்டுவில் கர்நாடகம் புதிய அணை கட்ட முயற்சிப்பது, தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதாகும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
தில்லியில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக் குழு சந்தித்தது. அப்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அமைச்சரிடம் தெரிவித்ததாவது, மேக்கேதாட்டுவில் கர்நாடகம் புதிய அணை கட்ட முயற்சிப்பது, தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதாகும். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுத்தால், இலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறி விடும்; விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பகுதி மக்கள் வேலை இழந்து விடுவார்கள்; வாழ்க்கை ஆதாரங்களை இழந்துவிடுவார்கள்.
எனவே, மத்திய அரசு, கர்நாடகத்துக்கு ஆதரவாக இருந்தால், தமிழ்நாடு மட்டும் அல்ல; ஒட்டுமொத்தமாக இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிடும். இந்தப் பிரச்னையை நாம் கூட்டாகச் சேர்ந்துதான் எதிர்கொள்ள வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின், தில்லிக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, மேகேதாட்டு அணை கட்டக் கூடாது; அப்படிக் கட்டினால், தமிழ்நாட்டுக்குக் கடும் பாதிப்புகள் ஏற்படும் என்பதை எடுத்துக் கூறினார்.
மேக்கேதாட்டுவில் அணை கட்டினால், காவிரி நதிநீரில், தமிழ்நாட்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் ஒதுக்கி, உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணை, வெறும் கானல் நீர் ஆகி விடும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...