தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பேரிடர் கால வழக்குகளை திரும்பப் பெற வணிகர் பேரமைப்பு கோரிக்கை

தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் தமிழக அரசுக்கு சில முக்கிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

News image
பேரிடர் கால வழக்குகளை திரும்பப் பெற வணிகர் பேரமைப்பு கோரிக்கை
Updated On :16 ஜூலை 2021, 7:40 am

DIN


சென்னை: கரோனா பெருந்தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில், வணிகர்களின் வாழ்வாதாரம் கருதி மேலும் தளர்வுகளை அளிக்க தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் தமிழக அரசுக்கு சில முக்கிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

அதில், கரோனா பெருந்தொற்று பேரிடரால் மிகவும் பாதிக்கப்பட்ட வணிகர்கள் தற்போது மீண்டெழுந்து வரும் நிலையில் கடைகளுக்கு சீல் வைப்பது, அடிக்கடி அபராதம் விதித்தல் போன்றவை நிறுத்தப்பட  வேண்டும்.

பேரிடர் காலத்தில் வணிகர்கள் மீதான வழக்குகள் முழுமையாக திரும்பப் பெற வேண்டும். அதிகபட்சமாக தண்டனைகள், அபராதம், வெகுவாகக் குறைக்கப்பட வேண்டும்.

YouTube video thumbnail

அனைத்து உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும்.

ஜவுளி, நகைக் கடைகளை இதர வணிக நிறுவனங்களுக்கு இணையாக கால நீட்டிப்பு செய்து, திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும். 

நகைக் கடை, நகை அடகுக் கடை, ஜவுளிக் கடை மற்றும் உணவகக் கட்டடங்களுக்கு சொத்து வரி, குடிநீர் வரி, கழிவு நீர் வரி போன்றவற்றை குறைந்தது 6 மாத காலத்துக்கு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.