தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுவையில் 94 பேருக்கு கரோனா: 11 குழந்தைகளுக்கும் தொற்று பாதிப்பு

புதுவையில் சனிக்கிழமை நிலவரப்படி 15 குழந்தைகள் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 11 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

புதுவையில் 94 பேருக்கு கரோனா: 11 குழந்தைகளுக்கும் தொற்று பாதிப்பு

Updated On :17 ஜூலை 2021, 7:42 am

DIN

புதுவையில் சனிக்கிழமை நிலவரப்படி 15 குழந்தைகள் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 11 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில், புதுச்சேரியில் 70 நபர்களுக்கும், காரைக்காலில் 19 நபர்களுக்கும், மாஹேவில் 2 , ஏனாமில் 3 நபர்களுக்கும் என மொத்தம் 94 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மாநிலத்தில் 1,170 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் இதுவரை 1,16,657 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் இருவர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதால், மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,776 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 1,19,603 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்குத் தொற்று
புதுவையில் சனிக்கிழமை நிலவரப்படி 15 குழந்தைகள் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டனர். அதில் 11 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 5 வயதுக்கு கீழ் 8 பேருக்கும், 5 வயதிற்கு மேல் 3 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளின் தாயார் 3 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.