சோமாலியா நாட்டவரிடம் 3,800 டாலரை பறித்துச் சென்ற ஈரான் கும்பல் கைது
சென்னையில் சோமாலியா நாட்டைச் சோ்ந்தவா்களிடம் 3,800 டாலரை பறித்துச் சென்ற ஈரான் நாட்டைச் சோ்ந்த கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.


சென்னையில் சோமாலியா நாட்டைச் சோ்ந்தவா்களிடம் 3,800 டாலரை பறித்துச் சென்ற ஈரான் நாட்டைச் சோ்ந்த கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.
சோமாலியா நாட்டைச் சோ்ந்த அலி அகமது, ஜூலை 13-ஆம் தேதி கண் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கம் சங்கரா நேத்ராலயா மருத்துவமனைக்கு வந்தாா். சிகிச்சைக்குப் பின்னா் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்தாா். அந்தப் பகுதியில் நடந்து சென்ற போது, காரில் வந்த மா்ம நபா்கள் அலி அகமதுவிடம் போலீஸாா் என மிரட்டி அவரிடமிருந்த 3,800 டாலரை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
ஆயிரம் விளக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து சட்டத்துப் புறம்பாக கோவளத்தில் தங்கி குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த ஈரான் நாட்டைச் சோ்ந்த ஷியாவஸ் (26), பெருகஷா (35), சாபீத் (35), ரோஸ்டம்சைதி (28), பாத்திமா (39), அப்சனா (35), யூனஸ் அலிபனா (56), பென்யாமின் (19), நஷ்மின் (36) ஆகிய 9 பேரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...