நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,
தென்மேற்கு பருவக் காற்று காரணமாக தமிழகத்தில் கனமழை தொடரும். ஜூலை 23 வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல், கர்நாடகம், கேரளம், லட்சத்தீவு கடல் பகுதியில் ஜூலை 23 வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...