நாகூர் ஆண்டவர் தர்காவில் பக்ரீத் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி

நாகையை அடுத்துள்ள நாகூர் ஆண்டவர் தர்காவில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை புதன்கிழமை காலை நடைபெற்றது.
நாகூர் ஆண்டவர் தர்காவில் பக்ரீத் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி
நாகூர் ஆண்டவர் தர்காவில் பக்ரீத் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி

நாகப்பட்டினம் : நாகையை அடுத்துள்ள நாகூர் ஆண்டவர் தர்காவில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை புதன்கிழமை காலை நடைபெற்றது. நிகழாண்டில் பண்டிகையைக் கொண்டாட வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாக இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர்.

இறைத் தூதர் இப்ராஹிம் நபிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில், தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையையொட்டி, நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள நவாப் ஜாமியா மஸ்ஜித் மற்றும் மதார் மரைக்காயர் பள்ளியில் காலை 8.30 மணி அளவில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

நாகூர் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளான இஸ்லாமியர்கள் இந்த சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்குப் பின்னர், அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பெரும்பாலானோர் முக்ககவசம் அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர்.

இதேபோல, நாகூரில் உள்ள ஏழு லெப்பை ஜாமியா மஸ்ஜித், செய்யது பள்ளி, தெருப்பள்ளி, தர்கா காதிரிய்யா மதரஸா, திவான் மஸ்ஜிது, நாகை யாஹூசைன் ஜாமியா மஸ்ஜித், புதுப்பள்ளி ஜாமியா மஸ்ஜித், மீராப்பள்ளி ஜாமியா மஸ்ஜித், மரைக்காயர் ஜாமியா மஸ்ஜித் ஆகிய பள்ளிகளிலும் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. 

கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தால் பக்ரீத் பண்டிகை வீட்டளவிலேயே முடங்கிய நிலையில், நிகழாண்டில் பண்டிகையைக் கொண்டாட வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக, பக்ரீத் தொழுகையில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com