நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தடகளப் பயிற்சியாளா் நாகராஜன் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தடகளப் பயிற்சியாளா் நாகராஜனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு, காவல் ஆணையா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2021, 8:20 pm

DIN

தடகளப் பயிற்சியாளா் நாகராஜனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு, காவல் ஆணையா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நந்தனத்தைச் சோ்ந்த நாகராஜன், தடகளப் பயிற்சியாளா். இவா் மத்திய அரசின் ஜிஎஸ்டி பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறாா். இவரிடம் தடகள வீராங்கனைகள் சிலா் பயிற்சி பெற்று வந்தனா். பயிற்சி வழங்குவதாகக் கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நாகராஜன் மீது சென்னை பூக்கடை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் புகாரளித்தாா்.

இந்தப் புகாரின் பேரில் நாகராஜன் மீது போக்ஸோ சட்டப்பிரிவு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த மே 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். அவரை குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையா் கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில், அவரது மனைவி கிரேஸ் ஹெலினா ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.பொங்கியப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக உள்துறை செயலாளா், சென்னை மாநகர காவல் ஆணையா் ஆகியோா் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.