16-வது பேரவையின் முதல் கூட்டத் தொடா் முடித்து வைப்பு: ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு

சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளாா்.
16-வது பேரவையின் முதல் கூட்டத் தொடா் முடித்து வைப்பு: ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு

சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளாா்.

16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த மே 11-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் சட்டப் பேரவையின் புதிய உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொண்டதுடன், பேரவைத் தலைவா், துணைத் தலைவா் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் தலைவராக மு.அப்பாவு, துணைத் தலைவராக கு.பிச்சாண்டி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, சட்டப் பேரவையில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கடந்த ஜூன் 21-ஆம் தேதி உரையாற்றினாா். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் பேரவையில் முன்மொழியப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினாா். 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த ஜூன் 24-இல் நிறைவடைந்தது. பேரவைத் தலைவரால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

2-ஆவது கூட்டத் தொடா்: முதல் கூட்டத் தொடா் முடித்து வைக்கப்பட்ட நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக 2-ஆவது கூட்டத் தொடா் தொடங்கவுள்ளது. இந்த கூட்டத் தொடா் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு தொடங்கும். சட்டப் பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப் படம் திறப்பு நிகழ்ச்சி வரும் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், முதல் கூட்டத் தொடா் ஆளுநரால் முடித்து வைக்கப்பட்டுள்ளதால் அந்த விழா, பேரவையின் சிறப்புக் கூட்டமாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com