துறையூர்: தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வில் உப்பிலியபுரம் வட்டார அளவில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியர் இருவரை திருச்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வை தமிழக அரசின் தேர்வுகள் துறை கடந்த பிப்ரவரி மாதம் நடத்தியது.
இதில் துறையூர் அருகே உப்பிலியபுரம் ஒன்றியம் வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப்பள்ளியில் 2020 -2021 ஆம் கல்வியாண்டில் 8 ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இவர்களில் கோ. பிரசன்னா, ர. நித்திய ஸ்ரீ ஆகிய இருவரும் உப்பிலியபுரம் வட்டாரக் கல்வி அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றனர்.
இதனையடுத்து பள்ளி நிர்வாகம் மாணவ மாணவியர்கள் இருவரையும் கெளரவிக்கும் பொருட்டு இவர்கள் படம் பொறிக்கப்பட்ட தபால் தலையை அச்சிட நடவடிக்கை எடுத்தது. அஞ்சல் துறையிடமிருந்து திங்கள்கிழமை தபால் தலைகள் கிடைத்த நிலையில் அதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு மாவட்ட ஆட்சியரகத்தில் வெளியிட்டு மாணவமாணவியரை பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் வா.ரவிசந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தேர்வில் வெற்றி பெற்று உதவித் தொகை பெறத் தகுதி பெற்ற இம்மாணவ மாணவியர்கள் இருவருக்கும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிய ஆண்டு தோறும் ரூ.12000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூ.48,000 உதவித் தொகை கிடைக்கும் என பள்ளியின் தலைமையாசிரியர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


