எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சீர்காழி பகுதியில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து சீர்காழி பகுதியில் அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினார்.

News image
சீர்காழி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
Updated On :28 ஜூலை 2021, 6:10 am

DIN


தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து சீர்காழி பகுதியில் அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவரும், சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி .வி. பாரதி தனது குடும்பத்தினருடன் திருவெண்காடு அவரது இல்லத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். 

திமுக வாக்குறுதிகளான ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை, மாதம் தோறும் மின் கட்டணம் வசூலிப்பு,  குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ .4 , சமையல் எரிவாயு உருளாக்கு ரூ.100 குறைப்பு, நெல் குவிண்டாலுக்கு ரூ 2500, கரும்பு டன்னுக்கு ரூ.4000 வழங்கும் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி கையில் பதாகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Story image

சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி .வி. பாரதி தனது இல்லத்திற்கு முன்பாக குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். 

இதேபோன்று சீர்காழி கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் செம்மங்குடியிலும், கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் அல்லிவிளாகத்திலும் , கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் நற்குணன் கொள்ளிடத்திலும் , மேற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பேரூர் செயலாளர் போகர் சி.ரவி வைத்தீஸ்வரன் கோயிலில் சீர்காழி நகர செயலாளர் பக்கிரிசாமி அவரது இல்லத்திலும் ஜெ பேரவை செயலாளர் மணி மற்றும் வழக்குரைஞர் நெடுஞ்செழியன் அவரது இல்லத்தின் முன்பு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாடி செல்வ முத்துக்குமரன் மருதங்குடி ஊராட்சி ஆலஞ்சேரி அவரது இல்லத்தின் முன்பு கையில் பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பினர்.

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 பஞ்சாயத்துகளிலும் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அதிமுக ஊராட்சி செயலாளர்கள் கிளை செயலாளர்கள் கட்சியினர் அவரவர்கள் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 பஞ்சாயத்துகளிலும் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கட்சியினர் அவர்கள் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகள் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி உள்ள 15 வார்டுகளில் அதிமுகவினர் அவர்கள் வீடுகளின் முன்பு திமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர் கையில் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.