புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் கனிமொழி சந்திப்பு

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் தலைவருமான மம்தா பானர்ஜியை திமுகவின் கனிமொழி வியாழக்கிழமை சந்தித்தார்.

News image

மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் கனிமொழி சந்திப்பு

Updated On :29 ஜூலை 2021, 11:42 am

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் தலைவருமான மம்தா பானர்ஜியை திமுகவின் கனிமொழி வியாழக்கிழமை சந்தித்தார்.

இந்த சந்திப்பானது, தில்லியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் இல்லத்தில் நடைபெற்றது. இதுகுறித்து டிவிட்டரில் கனிமொழி பதிவிட்டிருப்பது, “மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை சந்தித்துப்பேசியது மகிழ்வளிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.

மத்திய அரசின் ஜனநாயக விரோதப் போக்கு மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதின் அவசியம் குறித்தும் உரையாடினோம்.”

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் நோக்கில் தில்லிக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை மம்தா சந்தித்து வருகிறார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து மம்தா ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.