தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சசிகலா தலைமைக்கு அதிமுக சென்றுவிடும்: கார்த்தி சிதம்பரம் ஆருடம் 

அதிமுகவும் சசிகலாவின் தலைமைக்கு சென்றுவிடும்; இது எனது அரசியல் ஆருடம் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

News image
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்
Updated On :5 ஜூன் 2021, 8:11 am

DIN


அதிமுகவும் சசிகலாவின் தலைமைக்கு சென்றுவிடும்; இது எனது அரசியல் ஆருடம் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பெரிதும் பேசும் பொருளாக மாறினார் அவரது தோழி சசிகலா.  சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலாவால் தமிழக அரசியலில், அதிமுகவில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று பலரும் ஆருடம் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க போவதாக கூறினார்.

இதற்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தால் அதற்கு நான் தான் காரணம் என்ற பழியை தன் மீது போட்டுவிடுவார்கள். அதனால் தேர்தலுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்றுவார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அதிமுக தொண்டர்கள் சிலருடன் சசிகலா பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் ஒன்றிய அமமுக செயலா் என்.கோபால், சசிகலாவை நேரில் சந்தித்துப் பேச கடிதம் மூலம் நேரம் கேட்டிருந்தாா். ஆனால், தற்காலிகமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதால் கட்சி நிா்வாகிக்கு பதிலளிக்காமல் மௌனமாக இருந்த சசிகலா, கடந்த மே 26-ஆம் தேதி செல்லிடப்பேசி மூலம் தொடா்புகொண்டு அவரிடம் பேசியுள்ளாா்.

முன்னதாக நலம் விசாரித்த அவரிடம், கரோனா காலகட்டம் என்பதால் கடிதம் மூலம் தொடா்பு கொள்ள முடியவில்லை, நேரிலும் அழைத்துப் பேச முடியவில்லை. அதனால் செல்லிடப்பேசி மூலம் பேசுகிறேன் என கூறிய சசிகலா, தைரியமாக இருங்கள் நான் விரைவில் உங்களைச் சந்திப்பேன். மகிழ்ச்சியுடன் இருங்கள். அனைத்தையும் சரிசெய்து விடலாம் கவலைப்பட வேண்டாம்.

மேலும், விரைவில் நான் நல்லது செய்வேன் மகிழ்ச்சியோடு இருங்கள்; கவலைப்படாமல் இருங்கள் என உரையாடியுள்ளாா். இந்த உரையாடல் அக்கட்சித் தொண்டா்களிடையே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அதிமுகவும் சசிகலாவின் தலைமைக்கு சென்றுவிடும்; இது எனது அரசியல் ஆருடம் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசி கார்த்தி சிதம்பரம், திமுகவும் சசிகலாவின் தலைமைக்கு சென்றுவிடும். எடப்பாடி கே.பழனிசாமி முதல்வரானது ஒரு சரித்திர விபத்து என்றும் அந்த கதை முடிந்து விட்டது. 

மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா அதனால் மத்திய அரசை ஒன்றியம் என அழைப்பது தவறில்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறினார். 

சசிகலா வெளியிட்டு வரும் ஆடியோ குறித்து எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் சசிகலா இல்லை. பேரவைத் தோ்தலின்போது அரசியலில் இருந்து விலகிவிட்டதாக அவா் அறிக்கை வெளியிட்டாா். அதனால், அதிமுக குறித்து அவா் கருத்து சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. அதேநேரம் அமமுக தொண்டா்களைச் சந்தித்துப் பேசி வருகிறாா் என நினைக்கிறேன். அதிமுக தொண்டா்களிடம் பேசியதாக எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், வேண்டுமென்றே, திட்டமிட்டு அதிமுகவில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஆடியோ வெளியிட்டுள்ளனா். அவா்களின் முயற்சி ஒரு போதும் பலிக்காது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.