சென்னையை அடுத்த வண்டலூரில் வனத் துறை கட்டுப்பாட்டில் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. இந்த பூங்காவில் சிங்கம், யானை, புலி, ஊா்வன மற்றும் பறவைகள் என 2,500-க்கும் மேற்பட்ட வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கரோனா பொதுமுடக்கம் காரணமாக வண்டலூா் பூங்கா மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களில் 11-க்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 9 சிங்கங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 9 வயதுடைய நீலா என்ற பெண் சிங்கம் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தது.