ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நாளை 2,000 இடங்களில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நாளை 2,000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. 

News image
Updated On :7 ஜூன் 2021, 9:38 am

DIN

மத்திய அரசைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நாளை 2,000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. 
இதுகுறித்து அக்கட்சியின் அலுவலகச் செயலாளர் எம். ஆர். ரகுநாதன் வெளியிட்ட அறிக்கையில், பாஜக ஒன்றிய அரசின் வஞ்சகப் போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 2000 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்.
பாஜக ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவாமல், மாநிலத்தை வஞ்சிக்கும் போக்கில் தீவிரமாக செயல்படுகிறது.
கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புக்கு பேரிடர் நிதியுதவி செய்யாமலும் தடுப்பூசி மருந்துகள், மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர் போன்றவைகளை தமிழ் நாட்டிற்கு நியாயமான அளவில் ஒதுக்காமல் மக்கள் நலனை புறக்கணித்து வருகிறது.
இந்த நெருக்கடியான நேரத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளைகளின் விலைகளை உயர்த்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் வழிப்பறிக் கொள்ளைக்கு பாஜக அரசு ஆதரவாக செயல்படுகிறது. மறுபக்கம் ஒன்றிய - மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும் கலால் வரியை குறைத்து, மாநிலங்களின் நிதியாதாரத்தை அபகரித்து வருகிறது.
நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு மற்றும் திறன் தேர்வுகள் நடத்தியும், புதிய கல்விக் கொள்கையின் பெயரிலும் மாநில மக்களின் கல்வி உரிமையை பறித்து வருகிறது.
பாஜக ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், மக்கள் நலன் சார்ந்த கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாளை 08.06.2021 தமிழகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட மையங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
தலைநகர் சென்னையில், கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். இரா. முத்தரசன் தலைமையில் தி.நகர், 43, செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கோரிக்கைகள்..
பாஜக ஒன்றிய அரசே!  
01. ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்டுள்ள தடுப்பூசி உள்ளிட்ட கரோனா தடுப்பு மருந்துகள் அளவு குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும்.
02. செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் (எச்எல்எப்) பயோடெக் ஒருங்கிணைந்த தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தையும், அது தொடர்பான சொத்துக்களையும் தமிழக அரசிடம் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும்.
03. ஜிஎஸ்டி வரிவிதிப்பு இழப்பீட்டு தொகை உட்பட தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி பாக்கி முழுவதையும் உடனடியாக மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.
04. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து, முறையே ரூ.50 மற்றும் ரூ.40 க்கு பெட்ரோல், டீசல் விற்க வேண்டும்.
மேற்கண்ட நிகழ்வுக்கு தங்கள் ஊடகத்தின் செய்தியாளர்கள், ஒலி, ஒளிப்பதிவாளர்கள், நிழற்பட நிருபர்கள் ஆகியோரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.