தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கரோனா சிகிச்சை: கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

News image
Updated On :7 ஜூன் 2021, 7:16 am

DIN

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து சிகிச்சை அளிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், முதல்வரின் காப்பீடு திட்டத்தில் சேருவதற்கான வருமான உச்ச வரம்பை இரு மடங்காக அதிகரிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞர், கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார். இதனையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.