ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ரூ. 20 கோடி கரோனா நிவாரண நிதி

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 20 கோடி வழங்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :7 ஜூன் 2021, 11:27 am

DIN

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 20 கோடி வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பாக கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கான காசோலையினை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம்  தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் .சிவ.வீ. மெய்யநாதன்  வழங்கினார்.

இந்நிகழ்வின்போது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் அ.வ.வெங்கடாசலம்., இ.வ.ப., மற்றும் உறுப்பினர் செயலர் முனைவர் சா.செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.