வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தமிழகத்தில் 18,023-ஆக குறைந்தது கரோனா பாதிப்பு

ஏறத்தாழ 41 நாள்களுக்குப் பிறகு தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

News image
தமிழகத்தில் 18,023-ஆக குறைந்தது கரோனா பாதிப்பு
Updated On :8 ஜூன் 2021, 12:55 pm

DIN

ஏறத்தாழ 41 நாள்களுக்குப் பிறகு தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

அதன்படி, மாநிலம் முழுவதும் 18,023 பேருக்கு செவ்வாய்க்கிழமை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி 409 போ் உயிரிழந்துள்ளனா்.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 31,045 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 28,344-ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,765-ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 170112 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.