தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

News image
மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
Updated On :14 ஜூன் 2021, 12:45 pm

DIN

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு இன்று முதல் ஒரு வாரத்துக்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா  தடுப்புப் பணிகள் மற்றும் மாநில வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக நாளை காலை 11 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

மாநிலத்தில் பொதுப் போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படாத நிலையில், பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதையும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.