பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ராகுல் பிறந்தநாள்: கிருஷ்ணகிரியில் உணவுப் பொருள்கள் வழங்கல்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 51-ஆவது பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரியின் லண்டன் பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம்எதிரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. 

News image

ராகுல் பிறந்தநாள்: கிருஷ்ணகிரியில் உணவுப் பொருள்கள் வழங்கல்Rahul's birthday: Food distribution in Krishnagiri

Updated On :19 ஜூன் 2021, 8:56 am


கிருஷ்ணகிரி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 51-ஆவது பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரியின் லண்டன் பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம்எதிரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. 

கரோனா தொற்று பரவலால்  வருவாய் இழந்து வாழும்  125 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணை மாவு, சர்க்கரை சோப்பு,  உப்பு உள்ளிட்ட 19 விதமான  அத்தியாவசிய உணவு பொருள்கள்   வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்வுக்கு முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர்  ரகமத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் தகி, எஸ்.சி., எஸ்.டி.பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம் ஷானவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த  நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன், மாநில செயற்குழு உறுப்பினர் அக.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சூர்யா கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினர்.

மேலும்,  இந்த நிகழ்வில்  வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன், பட்டதாரி அணி மாவட்ட தலைவர் சரவணன், மீனவர் அணி மாவட்ட தலைவர் செல்வம், ராகுல் காந்தி புரட்சி பேரவை செயல் தலைவர் பாபு, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஷபிக் அஹ்மத், ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி விஜயன் சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டனர். முடிவில் அஜிஸ்வுல்லா நன்றி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.