நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 21) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.









