இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

News image
Updated On :21 ஜூன் 2021, 3:49 pm

DIN

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக அரசின் 16வது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டம் வரும் வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில், திமுக சார்பில் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

Story image

இந்த கூட்டத்தில் பங்கேற்ற பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியதாவது, 

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்றேன். பேரவையில் கண்ணியத்தோடும்-கட்டுப்பாட்டோடும் கடைமையாற்ற திமுக தலைவர்-முதல்வர் அறிவுரைகளை வழங்கினார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.