தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாவட்டங்களுக்கிடையே ஜூன் 28 காலை 6 மணிமுதல் பேருந்துகள் இயக்கம்

தமிகழத்தில் பேருந்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் ஜூன் 28 காலை 6 மணிமுதல் பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image
மாவட்டங்களுக்கிடையே ஜூன் 28 காலை 6 மணிமுதல் பேருந்துகள் இயக்கம்
Updated On :26 ஜூன் 2021, 11:08 am

DIN

தமிகழத்தில் பேருந்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் ஜூன் 28 காலை 6 மணிமுதல் பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்களை வகை 1, வகை 2 மற்றும் வகை 3 எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் வகை 3க்கு ஏற்கனவே பேருந்து சேவைகள் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த 27 மாவட்டங்களிலும், மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகளை 50 சதவீத இருக்கைகளுடன் இயக்க அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் பேருந்து சேவையானது, ஜூன் 28ஆம் தேதி காலை 6 மணிமுதல் மீண்டும் தொடங்கப்படும் என தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

வகை 1 - (11 மாவட்டங்கள்)

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்

வகை 2 - (23 மாவட்டங்கள்)

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர்,
திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.

வகை 3 - (4 மாவட்டங்கள்)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.