சென்னை: தமிழகத்தில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கி நடத்துவது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் பள்ளி இறுதியாண்டுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் பிளஸ் 2 மதிப்பெண்களை கணக்கிடும் முறை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
வழக்கமாக, ஜூலை 2வது வாரத்தில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்பதால், கடந்த வாரம் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் முறை வெளியிடப்பட்டு, அது ஜூலை மாதம் 31-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவ சேர்க்கை இடங்களை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த 9 லட்சம் மாணவர்கள், கரோனா பொதுமுடக்கம் காரணமாக தேர்வு எழுதாமல், தேர்ச்சி பெற்று அடுத்த நிலைக்குச் செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


