எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் வெங்கைய நாயுடு

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு சென்னையில் இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

News image
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் வெங்கைய நாயுடு
Updated On :1 மார்ச் 2021, 9:05 am

DIN


சென்னை: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு சென்னையில் இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் புகைப்படத்துடன் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில், இன்று கரோனா முதல் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன். இன்னும் சரியாக 28 நாள்கள் இடைவெளியில் இரண்டாவது கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.

அதுபோலவே, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதிவாய்ந்த மக்கள் அனைவரும் தாங்களாகவே முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கரோனாவுக்கு எதிரான போரில் நாடு வெற்றி பெற ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.