பேரவைத் தேர்தல்: காவல்துறையினருக்கு விடுமுறை கிடையாது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமையும் வரை காவல்துறையினருக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரவைத் தேர்தலை முன்னிட்டு காவல்துறையினருக்கு விடுமுறை கிடையாது

இது தொடர்பாக காவல்துறை டிஜிபி அலுவலகத்திலிருந்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் சுமார் ஒரு லட்சம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில் தமிழக காவல்துறையினர் பணியாற்றும் வகையில் காவல்துறை டிஜிபி திரிபாதி பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், டிஜிபி அலுவலகத்திலிருந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில், தேர்தலை முன்னிட்டு காவல்துறையினருக்கு விடுமுறை கிடையாது என்றும், மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com