சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுகவுடன் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து திமுக ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது.
இதனையொட்டி கூட்டணிக் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.
திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
விசிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதால், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து திமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மேற்காசிய போருக்கு விரைந்து முடிவு : பிரதமா் மோடி அழைப்பு

வருவாய்த் துறையினா் மறியல்: 240 போ் கைது

தென்மண்டல பல்கலை. சதுரங்கப் போட்டி - ஆந்திர மாநில அணி சாம்பியன்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

