தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு: ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது நாளாக கருப்புக்கொடி போராட்டம்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது நாளாக கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

News image

ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை கருப்புக் கொடி கட்டியிருக்கும் மேட்டுத் தெரு

Updated On :4 மார்ச் 2021, 10:32 am

DIN

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் நாளான வியாழக்கிழமையும் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் 93 சாதியினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆனால் ஒரே சாதியினருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு இது சமூக அநீதி ஆகும் எனவே இதனைக் கண்டித்து கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடைபெறும் என மறவர் மகாசபை மறவர் நலக் கூட்டமைப்பு தேவர் பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பல்வேறு இடங்களில் தமிழக அரசின் இந்த 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு வகையில் தமிழக அரசைக் கண்டித்து திருவில்லிபுத்தூர் மேட்டுத்தெரு, திருவண்ணாமலை, மங்காபுரம் ஆகிய பகுதியில் இரண்டாவது நாளாக கருப்புக்கொடி கட்டி தமிழக அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.